முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..!

அமெரிக்க அமைப்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை, ஜூலை-10

அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு ‘paul harries fellow ‘ என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமானதம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *