புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி, ஜூலை-10

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் தனவேலு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
முன்னதாக, தமது பாகூர் தொகுதியில் அரசு திட்டங்களை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆளுநர் ஆய்வு செய்ய வந்தால் செல்லக்கூடாது என்று எனக்கு அழுத்தம் தரப்பட்டது எனவும் அரசு மருத்துவமனை குறைகளை பேசக்கூடாது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் என்னை தடுத்தனர் என தனவேலு குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், புதுச்சேரி அரசை கண்டித்து பொதுமக்களுடன் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தனவேலு போராட்டம் நடத்தியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமது பாகூர் தொகுதியில் அரசு திட்டங்களை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ. தனவேல் தெரிவித்திருந்தார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தனவேலு, முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுமைத்தன்மை இல்லையென்று கூறி, அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் மனுவும் அளித்தார்.

இதையடுத்து, தனவேலு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அத்துடன் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனவேலுவை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலுவை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *