51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..!

51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூலை-10

தஞ்சாவூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நெல்லை, மதுரை, கோவை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.க்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட எஸ்.பி.யாக சுஜித் குமார், கோவை மாவட்ட எஸ்.பி.யாக அற அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை – மணிவண்ணன், காஞ்சிபுரம் – சண்முகப்பிரியா, திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக டி.ஜெயசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை- தேஷ்முக் சேகர், புதுக்கோட்டை – பாலாஜி சரவணன், ஈரோடு தங்கதுரை, நாமக்கல் எஸ்.பி சக்தி கணேசன், கன்னியாகுமரி – பத்ரி நாராயணன், கரூர் – பகலவன், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக ரவளி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *