இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மாநில வாரியான பட்டியல்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, ஜூலை-10

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 7,93,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 475 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 4,95,513 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,76,685 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,27,259 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,667 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,26,581 பேருக்கும், டெல்லியில் 1,07,051 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 151
ஆந்திர பிரதேசம் – 23814
அருணாச்சல பிரதேசம் – 302
அசாம் – 14032
பீகார் – 13944
சண்டிகர் -523
சத்தீஸ்கர் – 3675
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 411
டெல்லி – 107051
கோவா – 2151
குஜராத் – 39194
அரியானா – 19369
இமாச்சல பிரதேசம் – 1140
ஜம்மு – காஷ்மீர்- 9501
ஜார்க்கண்ட் -3246
கர்நாடகா – 31105
கேரளா -6534
லடாக் – 1055
மத்திய பிரதேசம் – 16341
மகாராஷ்டிரா – 230599
மணிப்பூர் – 1450
மேகாலயா -113
மிசோரம் – 197
நாகலாந்து – 673
ஒடிசா -11201
புதுச்சேரி – 1151
பஞ்சாப் – 7140
ராஜஸ்தான் – 22563
சிக்கிம் – 134
தமிழ்நாடு – 126581
தெலுங்கானா – 30946
திரிபுரா – 1776
உத்தரகாண்ட் – 3305
உத்தர பிரதேசம் – 32362
மேற்கு வங்காளம் – 25911

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *