கொரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலகம் 2 நாட்களுக்கு மூடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமைச்செயலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.அதன்படி தலைமைச்செயலகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-10

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மாதத்தில் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழக தலைமை செயலகம் மூடப்படுகிறது. தலைமை செயலகத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் 2 நாட்களுக்கு மூடப்பட உள்ளது. மொத்தமாக சுத்தம் செய்த பின் மீண்டும் திறக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *