நாங்குநேரி தொகுதியில் சாதி வாரி எண்ணிக்கை…

சென்னை, அக்டோபர்-09

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு, அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாரயணன் போட்டிடுகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் ரூபி மனோகரனை களம் இறக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் போட்டியிடுகிறார். நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், சுயேட்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியில் உள்ள சாதி வாரியான வாக்காளர்களின் அதிகாரப்பூரவமற்ற விபரங்கள் வெளியாகியுள்ளது. 299 வாக்குச்சாவடிகள் கொண்ட நாங்குநேரி தொகுதியில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 410 மொத்த வாக்காளர்களும், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 025 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 385 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் உள்ளனர்.  

நாங்குநேரி தொகுதியில் உள்ள சாதி ரீதியான ஓட்டுகள்:

நாடார் (கிறிஸ்தவர் உட்பட) – 82,052 பேர்

முக்குலத்தோர் -43,590 பேர்

தேவேந்திர குல வேளாளர்-30, 840 பேர்

யாதவர்-30,700 பேர்

ஆதி திராவிடர்-17,949 பேர்

முஸ்லீம் -15,385 பேர்

பிள்ளைமார்-7,692 பேர்

ரெட்டியார்-5,928 பேர்

பிராமணர்-5128 பேர்

செட்டியார்-3,846 பேர்

ஆசாரி-3,205 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *