ம.பியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

போபால், ஜூலை-10

மத்தியப் பிரதேசத்தின் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்த சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைப்பதற்காக ரேவா கூட்டு நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.138 கோடி நிதியை அளித்துள்ளது. இந்த திட்டத்தில் இருந்து கிடைக்கும் எரிசக்தியில் இருந்து 24% டெல்லி மெட்ரோவிற்கு வழங்கப்படும். மீதமுள்ள 76% மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாநில மின் பகிர்வுக் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 2021ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய மின்சக்தி திறன் கொண்ட அமைப்புகளை ஏற்படுத்துவது உட்பட 2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் சூரிய மின்சக்தி திறன் கொண்ட புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி திறனை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப் பாட்டை ரேவா திட்டம் வெளிப்படுத்துகிறது.மொத்தம் 1,500 ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட சூரிய எரிசக்தி பூங்காவினுள் 500 ஹெக்டேர் பரப்பளவில் ஒவ்வொன்றும் தலா 250 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 3 சூரிய மின்சக்தி அமைப்புகள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக திட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சூரிய சக்தி இப்போது மட்டுமல்லாமல் 21 ஆம் நூற்றாண்டின் ஆற்றல் தேவைகளின் மையமாக இருக்கும், ஏனெனில் சூரிய சக்தி நிச்சயமானது, தூய்மையானது மற்றும் பாதுகாப்பானது.

ரேவாவில் உள்ள இந்த சோலார் மின் உற்பத்தி ஆலை மூலம், இங்குள்ள தொழில்களுக்கு மின்சாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயிலுக்கு கூட அதன் பலன்கள் கிடைக்கும். ரேவாவைத் தவிர, ஷாஜப்பூர், நீமுச் மற்றும் சத்தர்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *