சென்னையில் கொரேனா பாதிப்புக்கு 20,271 பேர் சிகிச்சை.. மண்டல வாரியான விவரம்..
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை, ஜூலை-10

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக உள்ளது. 1,169 பேர் உயிரிழந்த நிலையில், 52,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,362 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 57.95 சதவீதம், பெண்கள் 42.05 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 8,128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
