அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஜூலை-10

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களுரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் விடுதலையாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், சசிகலா விடுதலை குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே அதிமுக எடுத்த முடிவே தொடரும். சிறையில் இருந்து நாளை சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை. ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் அதிமுகவுக்கு வரலாம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *