ஒரு வழியா தீபாவளிக்கு 2 நாள் லீவு விட்டாச்சு!!!

அக்டோபர்-09

தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 26-ம் தேதி சனிக்கிழமை 5வது வாரம் என்பதால் அன்று வழக்கம்போல பள்ளி அலுவல் நாளாக இருக்கும்.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26-ம் தேதி சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், அக்டோபர் 28-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *