ரூ.1 கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை வழக்கு…

சென்னை, அக்டோபர்-09

பேனர் விழுந்து பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கடந்த மாதம் சாலையோர தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அவர் மீது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த நிலையில், பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சுபஸ்ரீ மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், பேனர் வைப்பதை தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றவும், வலியுறுத்தப்பட்டுள்ளது.  தனது மகள் மரணத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சுபஸ்ரீயின் தந்தை ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *