சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..!
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை, ஜூலை-9

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. சென்னையில் தற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைவோரும் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12,761 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,978 பேரும், தண்டையாா்பேட்டையில் 6,022 பேரும், அண்ணா நகரில் 5,367 பேரும், கோடம்பாக்கத்தில் 4,984 பேரும், திரு.வி.க.நகரில் 3,929 பேரும், அடையாறில் 2,950 பேரும், வளசரவாக்கத்தில் 2,241 பேரும், அம்பத்தூரில் 2,057 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 167 பேரும், தண்டையாா்பேட்டை 163 பேரும், ராயபுரத்தில் 161 பேரும், திருவிக நகரில் 115 பேரும், கோடம்பாக்கத்தில் 110 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
