ஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, ஜூலை-9

அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன என்றார். மேலும், 12-ம் வகுப்பில் மீதமுள்ள ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12-ம் வகுப்பில் எஞ்சிய தேர்வை எழுதாதவர்களை எப்படி தேர்ச்சியடைய செய்ய முடியும். மீதமுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். 12ஆம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *