சீன அதிபர்-பிரதமர் மோடி தமிழகம் வருகை: 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்…

சென்னை, அக்டோபர்-09

சீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பார்வையிட உள்ளனர். 

இதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 8-ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வருவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்காக 34 சிறப்பு அதிகாரிகளும், மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *