இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, ஜூலை-8

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 742417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20642 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 456831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 16883 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 264944 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,250 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,18,558 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,18,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 71,116 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,02,831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,165 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 74,217 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *