ராஜஸ்தான்: தசரா கொண்டாட்டத்தில் ஆற்றில் மூழ்கி 12 பேர் உயிரிழந்த பரிதாபம்…

ராஜஸ்தான், அக்டோபர்-09

ராஜஸ்தான் மாநிலத்தில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின்போது 12 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகையின் வெற்றியை விஜயதசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் இந்துக்கள் போற்றி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் கடைசி நாளான நேற்று துர்கை அம்மன் சிலையை ஆற்றில் கரைப்பது வழக்கம்.

ராஜஸ்தான் மாநிலம் பார்வதி நதியில் ஆயிரக்கணக்கானோர் சங்கமித்து சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் எதிர்பாராதவிதமாக 10 பக்தர்கள் அடித்து சென்றனர். இந்நிலையில் சம்பவம் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து சென்ற 10 பேரின் உடலை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் இதேபோல மத்திய பிரதேச மாநிலத்தின் ஷாஜகான் நதியில் சிலையை கரைக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தினால் அவர்கள் குடும்பம் சோகத்தில் முடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *