தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு..!!

தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூலை-8

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நண்பர்கள் குழு உள்ளது. ஒவ்வொன்றிலும் தலா 20 பேர் வரை உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு என 34 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கின்றனர்.

இதனிடையே, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர்களையும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பயன்படுத்த கூடாது என்றும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு பதில் ஊர்காவல் படையை பயன்படுத்திக்கொள்ளவும், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து எதிர்மறையான அறிக்கையை காவல்துறை தலைவர் அரசுக்கு அளித்துள்ளார். டிஜிபி அளித்த அறிக்கை அடிப்படையில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *