அரசுப் பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்.. அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை-8

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் அரசுப் பள்ளிகள் கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:-

தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந்தேதி மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *