பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று..!

சமூக விலகல், முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை-7

பிரேசில் நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. அத்துடன் உலகிலேயே பிரேசில் நாட்டில் தான் கொரோனா பலி அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 1,628,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65,631 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 656 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜாயிர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது.. இதையடுத்து அலுவலக பணிகளில் இருந்து விடுத்து கொண்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அதிபர் ஜாயிர் போல்சனாரோ தனக்கு கொரோனா இருப்பதை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். போல்சனாரோ தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிபரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர். மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அதிபர் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததால் தற்போது முகக்கவசம் அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *