9 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைப்பு

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட இருக்கிறது.

டெல்லி, ஜூலை-7

மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ பாடங்களை குறைப்பது குறித்து அனைத்து கல்வியாளர்களிடம் இருந்தும் பரிந்துரைகள் கேட்கப்பட்டன. அதன்படி, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவினை எடுப்பதற்காக உதவிய அனைத்து கல்வியாளர்களும் நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் எனும் சூழ்நிலையால் சிபிஎஸ்இ பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *