தங்கக் கடத்தல் விவகாரம்.. கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம், ஜூலை-7

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஆபரேசனல் மேஜேனருமான ஸ்வப்னா சுரேஷ் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அரசின் ஐ.டி. செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முதல்வரின் முதன்மைச் செயலாளராக மிர் முகம்மது அலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் ஐடி பிரிவு ஆலோசகர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கம் கடத்தல் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து பினராயி விஜயன், ‘கடத்தல் சம்பவத்தை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். அதேநேரத்தில் சுங்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *