கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி..!!

நாடுமுழுவதும் பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வழிக்காட்டுதல்படி இறுதித் தேர்வுகளை பல்கலைக் கழகங்கள் கட்டாயம் நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜூலை-6

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.

இந்த சூழலில் இந்தியா முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இறுதி தேர்வுகளை சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய உயர்கல்வித்துறை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:அனைத்து கல்லூரிகள், பல்கலை.களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம். இதில் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களின்டி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு கல்லூரி மற்றும் பல்கலை. மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *