புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து.. மு.க.ஸ்டாலின் வரவேற்பு.!!
11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து செய்த தமிழக அரசின் முடிவிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை-6

மாணவர்களின் நலன்கருதி, ,2020-21-ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.
முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது!
இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி! என்று பதிவிட்டுள்ளார்.