காலாண்டு, அரையாண்டுத் தேர்வை முழுமையாக எழுதவில்லை எனில் ‘ஆப்சென்ட்’
பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால், ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜூலை-5

கடந்த ஜூன் 19 ஆம் தேதி தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி மீண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில், காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் பாடவாரியாக பெறப்பட்ட விடைத்தாள் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.