டெல்லியில் 1000 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை..அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆய்வு

டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் 11 நாட்களில் கட்டப்பட்ட ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனையை அமித் ஷா பார்வையிட்டார்.

டெல்லி, ஜூலை-5

டெல்லியில் நாளுக்கு நாள் கொரேனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், மக்கள் தனிமைப்படுத்துவதும் பணியும் சிரமமாக உள்ளது. இதனால் 10 ஆயிரம் படுக்கைகள் கெண்ட கொரோனா சுகாதார மையத்தை டெல்லி அரசு அமைத்து வருகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 1,000 படுக்கைகள் (250 ஐசியூ உள்பட) கொண்ட தற்காலிக மருத்துவமனையை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ராணுவ அமைச்சகத்திற்கு சொந்த இடத்தில் உருவாக்கி வந்தது.

11 நாட்களில் இந்த மருத்துவமனையை உருவாக்கியுள்ளது. இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் அந்த மருத்துவமனையை ஆய்வு செய்தனர். இந்த மருத்துவமனையை பாதுகாப்புப்படை போலீசார் நிர்வகிப்பனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *