3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு…

அக்டோபர்-09

வேதியியலுக்கான நோபல் பரிசு நடப்பு ஆண்டு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி. நடப்பு ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை ஜான் பி குட் எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரோ யோஷினோ ஆகிய மூவரும் பெறுகின்றனர். லித்தியம் – அயர்ன் பேட்டரிகளின் மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பிற்காக மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரிகள் உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவை தொடர்பு கொள்ளவும், வேலை செய்யவும், படிக்கவும், இசையைக் கேட்கவும், அறிவைத் தேடவும் பயன்படுகின்றன. லித்திமியன் பேட்டரிகள் நீண்ட தூர மின்சார கார்களின் வளர்ச்சியையும் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து ஆற்றலை சேமிப்பதற்கும் உதவியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *