கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடம்.. மண்டல வாரியான விவரம்..!

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை, ஜூலை-5

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 66,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். 41,309 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 24,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தற்போது ராயபுரம் மண்டலத்தில் 2,320 பேரும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,227 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,222 பேரும், கோடம்பாக்கத்தில் 2,737 பேரும், அண்ணா நகரில் 2,398 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *