அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து ஒ.பி.எஸ்., எஸ்.பி.வேலுமணி ஆறுதல்

திண்டிவனம், அக்டோபர்-09

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிமுகவினர் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உயிரிழந்த லோகேஸ்வரன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *