ஒரே நாளில் 24,850 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தை தாண்டியது..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஜூலை-5

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 19,268 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 613 உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,09,083 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,856 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,00,064 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8671 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,08,082 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,07,001 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ,60,592 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 97,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3004 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 68,256 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *