மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 % அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி, அக்டோபர்-09

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிவடைந்ததும், மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப் படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த அகவிலைப் படி உயர்வு, ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அகவிலைப் படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்  என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *