தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது..!
தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
சென்னை, ஜூலை-3

தமிழகத்தில் கொரோனாவின் தொற்று ஒரு லட்சத்தை கடந்தது
தமிழகத்தில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் நேற்று முதன்முறையாக நான்காயிரத்தை தாண்டியது.
இன்றும் 4 ஆயிரத்தை தாண்டியது. 4,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி 1,02,721 ஆக உள்ளது.
- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,357 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 42,955 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1385 – ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 64,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 32 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 996ஆக உள்ளது.
- இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இதுவரை 12,13,891 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 12 வயதிற்குள் 5053 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 85305 பேரும், 60 வயதிற்கு மேல் 12363 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.