காஞ்சிபுரத்தில் போதி தர்மர் சிலை- எம்.பி. விஷ்ணுபிரசாத் வேண்டுகோள்…

சென்னை, அக்டோபர்-09

குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை நிறுவியது போல மாமல்லபுரத்தில் போதி தர்மருக்கு சிலை நிறுவ வேண்டும் என்று ஆரணி தொகுதி எம்பி விஷ்ணுபிரசாத் கோரிக்கை வைத்துள்ளார்

காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரகாஷ் சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சீனா அதிபர்- பிரதமர் மோடியுடனான சந்திப்பு முக்கிய சந்திப்பாக உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பல்லவா வம்சத்தில் பிறந்தவர் போதி தர்மர். உழைப்பு, சுறுசுறுப்பு போன்ற தத்துவங்களை சீனாவுக்கு போதித்தது போதி தர்மர், இந்த கருத்துக்களை பின்பற்றி தான் சீனா வளர்ந்து வருகிறது.

போதிதர்மரின் புகழை தமிழர்களாகிய நாம் மறந்து விட்டோம். நமது பெருமையை உணர்ந்து வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைத்தது போன்று போதி தர்மருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மாமலபுரத்த்தில் சிலை அமைக்க வேண்டும், போதி தர்மர் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் காங்கிரஸ் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *