பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் பழனிசாமி

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஜூலை-2

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

“புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.”

இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ராஜா(27) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *