தமிழகத்தில் உச்சகட்டமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 98,392-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-2

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை. அறிகுறி இல்லாதவர்கள், இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அக்கறையுடன் சிகிச்சை நடைபெறுகிறது. முதியவர்கள், இதய நோய், கேன்சர் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனவில் இருந்து குணமடைவோரின் விகிதம் 57% ஆக உள்ளது.

 • தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 98,392-ஆக உயர்ந்துள்ளது.
 • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 56,021 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,095 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 1,321- ஆக உயர்ந்துள்ளது.
 • சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 62,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 41,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 • தமிழகத்தில் இதுவரை 11,79,649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
 • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.93% ஆக உள்ளது.
 • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,488 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,343 பேருக்கு தொற்று உறுதியானது.
 • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 60,395 ஆண்கள், 37,975 பெண்கள், 22 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *