வேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, காவலர் முத்துராஜ் அப்ரூவராகிறார்கள்..!!

சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி சாட்சியாகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காவலர் ரேவதி காவல்துறைக்கு எதிராக சாட்சி அளித்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் சாட்சியாக மாறியுள்ளார்.

தூத்துக்குடி, ஜூலை-2

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் பொது முடக்கத்தை மீறியதாக சாத்தான்குளம் காவலர்களால் கடந்த 19 ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனா். அங்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், 21 ஆம் தேதி பென்னிக்ஸும், மறுநாள் ஜெயராஜும் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் தனித்தனியே 2 வழக்குகள் பதிந்தனா். காவல் துறையினா் தாக்கியதே தந்தை-மகன் இறப்புக்குக் காரணம் எனக் கூறி சாத்தான்குளத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் அரசியல் கட்சியினா், சமூக அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. மேலும், வணிகா் சங்கங்கள் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டங்கள் நடத்தின.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலா்கள் முருகன், முத்துராஜ் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் நேற்று சிபிசிஐடி காவலர்கள் அவர்கள் மீது இரண்டு கொலை வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் இரண்டு காவலர்களை வியாழக்கிழமை காலை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் போது ஆவணங்களை அழிக்க உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு இருப்பதாக சிபிசிஐடி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் நான்கு காவலர்களை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ள நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் முத்துராஜ் ஆகியோர் அப்ரூவராக சாட்சியம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *