சாத்தான்குளம் கைதுகள்.. கடமை இப்போதுதான் தொடங்குகிறது.. மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளம் சம்பவத்தில் முதலமைச்சரின் கடமை இனிமேல்தான் தொடங்குகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, ஜூலை-2

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் ;-

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரட்டைக்கொலையில் தொடக்கத்திலிருந்தே குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அ.தி.மு.க அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது. உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் என்று தீர்ப்பு எழுதிய முதலமைச்சர், ‘லாக் அப் மரணமே இல்லை’ என்ற உள்ளூர் அமைச்சர், மிரட்டிய காவல்துறை என ’மேலிடம்’ தொடங்கி அனைவருமே குற்றத்தை மறைக்க முயன்றனர்.

ஆர்த்தெழுந்த மக்கள், அரசியல் இயக்கங்கள், வணிகப்பெருமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அயராது உழைத்த ஊடகங்கள் மற்றும் நீதிமன்றம் என அனைத்து தரப்பினராலும் சுற்றி வளைக்கப்பட்டு தமிழக அரசு சிக்கிக் கொண்டது!

சிலரைக் கைது செய்திருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் அனைவரது வாயையும் மூடிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது. முதலமைச்சரின் கடமை இனிமேல்தான் தொடங்குகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் கண்காணிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *