கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. உலகளவில் 5.18 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!

உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,08,05,108 -ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் 5,18,968 ஆக உயர்ந்துள்ளது.

ஜூலை-2

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 213 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 5 ஆயிரத்து 108 -ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 5,19,050 ஆகவும், 42 லட்சத்து 58 ஆயிரத்து 561 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 57 ஆயிரத்து 941 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

  • தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 27,79,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,30,798 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 1,164,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளன.
  • பிரேசில் 14,53,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 60,713 பலியாகிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,536 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 654,405 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605,220 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,848 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,59,896 பேர் குணமடைந்தனர்.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 43,906 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313,483 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,363 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 296,739 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240,760 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10,958 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 230,211 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,061 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196,324 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,719 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,509 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,113 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,273 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,934 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,770 ஆக அதிகரித்துள்ளது.
  • குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,940 ஆக அதிகரித்துள்ளது.
  • சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,122 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 974 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,723 ஆக அதிகரித்துள்ளது.
  • மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,640 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *