விளம்பரங்களுக்கு மட்டும் விவசாயிகளா??? உ.பி. அரசு மீது பிரியங்கா காந்தி காட்டம்…

புதுடெல்லி, அக்டோபர்-09

உத்தர பிரதேசத்தில் விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்ந்திடும் அரசு நடந்து வருகிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

உத்தர பிரதேசத்தின் மகோபா மற்றும் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் கடன் விவகாரங்களில் சிக்கி தற்கொலை செய்து கொண்டனர்.  இதுபற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் உத்தரபிரதேச அரசை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.  ”விவசாயிகளை துன்புறுத்துவதற்காக புதிய வழிகளை அரசு கண்டறிந்து உள்ளது.  கடன் தள்ளுபடி என்ற பெயரில் மோசடி செய்து வருகிறது.  மின் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகளை சிறையில் தள்ளி வருகிறது என தெரிவித்து உள்ளார்.

வெள்ளம் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.  உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் திட்டங்கள், விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவு கூருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *