உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி; தனியார் மருத்துவமனை அறிக்கை

உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூன்-30

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் இதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு 14 நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட இரண்டாவது மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மியாட் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. இருந்தும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்து வந்ததை அடுத்து, இன்று செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *