வேலூரில் ஜூலை இறுதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ஜூன்-30

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும்.
  • இறைச்சிக்கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும்.
  • வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் மட்டுமே இயங்கும்.
  • மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களில் இயங்கும்.

முன்னதாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் ஜுலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *