மாஸ்க் எங்கே எனக்கேட்ட பெண் ஊழியர்..அடித்து துவைத்த அதிகாரி.. வைரல் வீடியோ..!!

ஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியரை துணை மேலாளர் கடுமையாகத் தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூர், ஜூன்-30

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஹோட்டல் ஒன்று ஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், துணை மேலாளராக பணிபுரிபவர் பாஸ்கர். கடந்த ஜூன் 27 அன்று இவருக்கும், ஹோட்டலில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளார். சக ஊழியர் ஒருவர் அவரைத் தடுக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அருகில் உள்ள கட்டையை எடுத்து பெண்ணைத் தாக்கியுள்ளார்.

முன்னதாக, அந்த பெண்ணிடம் பேசவந்தபோது, பாஸ்கர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இதுகுறித்து அந்த பெண் கேட்டதற்காக, பாஸ்கர் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த பெண், காவல் நிலையத்தில் பாஸ்கருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து பாஸ்கரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *