இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 2 வது இடத்துக்கு முன்னேறிய தமிழகம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,66,840-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லியை தமிழகம் பின்னுக்குத் தள்ளியது.

டெல்லி, ஜூன்-30

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்திலேயே உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 566840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 418 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16893 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 334822 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 13099 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 215125 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 169883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 86224 பேருக்கும், டெல்லியில் 85161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 86 ஆயிரமாக உயர்ந்தது. டெல்லியில் கரோனா பாதிப்பு 85 ஆயிரமாக இருக்கிறது. எனவே பாதிப்பில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்து வந்த டெல்லியை தமிழகம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *