சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு.. சிபிஐக்கு மாற்றம்.. அரசாணை வெளியீடு..!

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

சென்னை, ஜூன்-29

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உடல்நலக்குறைவு எனக்கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தந்தை மற்றும் மகன் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று போலீசார் இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி முன்னதாக தெரிவிதிருந்தார்.

இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *