ஊழியருக்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி, ஜூன்-29

புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 35 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சட்டப்பேரவை முழுமையாக மூடப்பட்டது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொரோனா பரிசோதனை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நாராயணசாமிக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

இருப்பினும் முதல்வர் நாராயணசாமியை ஐந்து நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, எந்தவித அரசியல் நிகழ்ச்சிகளும் ஆய்வுகளிலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முதல்வர் நாராயணசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் முதல்வர் அலுவலகம், முதல்வர் வீடு அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *