இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5.48 லட்சத்தை தாண்டியது; 16,475 பேர் பலி

இந்தியாவில் 5.48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58.6 சதவீத நோயாளிகள் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

டெல்லி, ஜூன்-29

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 548318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 19459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16475 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது.

இதுவரை 321723 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 12010 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 210120 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7429 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86,575 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,623 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 52,607 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 82,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1079 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,537 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *