தமிழகத்தை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதல்வர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? – ஸ்டாலின் கேள்வி

நாட்டை காவல்துறை கையில் கொடுத்துவிட்டு என்ன செய்துகொண்டு இருக்கிறார் முதல்வர்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, ஜூன்-28

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது ;-

தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் நான்காவது மரணம்!

இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் & போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்.

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை
முதல்வர் CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *