தமிழகத்தில் ஒரே நாளில் 3,940 பேருக்கு பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,940 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை, ஜூன்-28

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 82,295 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 45,537 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1,443 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 1079- ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,992 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 53,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 90 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 35,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 11,10,402 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.34% ஆக உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32,948 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 3940 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50,745 ஆண்கள், 31,509 பெண்கள், 21 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *