ஒன்றிணைவோம் வா திட்டத்தால் பரவும் கொரோனா..செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு பாதிப்பு..!

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம், ஜூன்-28

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.எஸ்.மஸ்தான். இவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் தன் தொகுதியில், 3 மாதங்களாக, தினமும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், எந்த அறிகுறியும் இல்லாமல் கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களேத்தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

முன்னதாக, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்த கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி ஆர்.டி.அரசு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திமுகவில் 4வது செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *