விக்கிரவாண்டியில் வைகோ தேர்தல் பிரச்சாரம்

சென்னை, அக்டோபர்-09

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

வருகிற 21 ந்தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் நேமூர், பனமலை, கெடார், விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதனையடுத்து வருகிற 12-ந்தேதி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *