இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது; 15,685 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஜூன்-27

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 508953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 18552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 384 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15685 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.1 சதவீதமாக உள்ளது.

இதுவரை 295881 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.1 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 197387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,52,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7106 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 79,815 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 77,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,492 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 47,091 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 74,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 957 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 41,357 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *